ஜீவனின் ‘அதிபரி’ல் தயாரிப்பாளரின் நிஜ வாழ்க்கை சம்பவங்கள்!

ஜீவனின் ‘அதிபரி’ல் தயாரிப்பாளரின் நிஜ வாழ்க்கை சம்பவங்கள்!

செய்திகள் 1-Jul-2015 12:47 PM IST VRC கருத்துக்கள்

சரத்குமார் நடித்த ‘மாயி’, ‘திவான்’ ஆகிய படங்களை இயக்கிய சூர்யபிரகாஷ் இயக்கியுள்ள படம் ‘அதிபர்’. இப்பட்த்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்க, திவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ‘பென் கன்ஸ்டோரிடியம் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் சார்பில் டி.சிவகுமார் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் கதை தயாரிப்பாளர் சிவகுமாரின் சொந்த வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாம்! அதாவது ஒரு தமிழனுக்கு இன்னொரு தமிழன் செய்யும் துரோகத்தால் நடைபெறும் விறுவிறு சம்பவங்கள் தான் படத்தின் திரைக்கதை என்கிறார்கள்!
முதலில் இந்த கதையில் நடிக்க ஜீவன் தயக்கம் காட்டினாராம்! பிறகு இந்த கதை, தயாரிப்பாளரின் சொந்த வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவகளை வைத்து எழுதப்பட்டது என்று விளக்கிக் கூறிய பிறகே ஜீவன் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம். அந்த அளவுக்கு இப்படத்தில் பல சம்பவங்கள் இடம் பெறுகிறதாம்!
‘‘இப்படத்தில் மாறுபட்ட ஒரு ஜீவனை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்’’ என்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் சூர்யபிரகாஷ்!

இப்படத்தில் ஜிவன், திவ்யாவுடன் தயாரிப்பாளர் டி.சிவகுமார் சிபிஐ திகாரியாக நடிக்க, சமுத்திரகனி, நந்தா, ரஞ்சித், ரிச்சர்ட், கவிதா பூஜாரி, தம்பி ராமையா, கோவை சரளா என பலர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.

அறிமுக இசை அமைப்பாளர் விக்ரம் செல்வா இசை அமைத்திருக்கிறார். பிலிப்ஸ் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மலேசியாவில் நடந்துள்ளது. தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஓடுற நரி வீடியோ பாடல் - எச்சரிக்கை


;