சார்மி நடிக்கும் பேய்ப் படம்!

சார்மி நடிக்கும் பேய்ப் படம்!

செய்திகள் 1-Jul-2015 12:22 PM IST VRC கருத்துக்கள்

சார்மி நடித்து வெளியான ‘மந்த்ரா படம் ஆந்திராவிலும், தமிழ் நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து ‘மந்த்ரா’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘மந்த்ரா- 2’ படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தை SSS ஃபிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.சுந்தரம் தயாரிக்கிறார். இப்படத்தில் கதாநாயகனாக ‘கருங்காலி’ படத்தில் நடித்த சீனிவாஸ் நடிக்கிறார். நாயகியாக சார்மி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் தணிகலபரணி நடிக்கிறார். இப்படத்தின் திரைக்கதை அமைத்து இயக்குகிறார் எஸ்.சி.சதீஷ். படம் குறித்து இயக்குனர் சதீச் கூறும்போது,

‘‘சொத்துக்காக ஆசைப்பட்டு அண்ணன் குடும்பத்தையே கொலை செய்கிறான் தம்பி. அதிலிருந்து தப்பித்து விடுகிற சார்மியின் உடம்பில் அவளது அப்பாவின் ஆவி புகுந்து கொண்டு அவளை காப்பாற்றுவதுடன் அந்த அக்கிரமங்களுக்குக் காரணமான தம்பியை எப்படி பழி வாங்குகிறது என்பதே ‘மந்த்ரா - 2’ படத்தின் கதை. இப்படம் திகில் கலந்த பேய் கதையாக உருவாகியுள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது’’ என்றார். இந்த படத்திற்கு ராஜேந்திரா ஒளிப்பதிவு செய்ய, சுனில் காஷ்யப் இசை அமைத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சார்மிங் சார்மி


;