அப்புக்குட்டியா இது...? - ஆச்சரியப்பட வைத்த அஜித்

அப்புக்குட்டியா இது...? - ஆச்சரியப்பட வைத்த அஜித்

செய்திகள் 1-Jul-2015 8:56 AM IST Chandru கருத்துக்கள்

‘வீரம்’ படத்தின் ஒரு காட்சியில், தன்னிடம் வீட்டு வேலை செய்த அப்புக்குட்டியின் திருமணப் பரிசாக கடை ஒன்றை அவர் பெயரில் எழுதி வைப்பார் அஜித். அப்போது, அஜித்தைப் பார்த்து, ‘‘தம்பி மயில்வாகனம்னு நீ கூப்பிடும் போதுலாம், சும்மாதான் கூப்பிறேன்னு நெனைச்சேன்ணே... ஆனா, நீ உள்ளத்துலயிருந்து கூப்பிட்டிருக்கண்ணே...!’’ என தழுதழுப்பார் அப்புக்குட்டி. அஜித் ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் கண்கலங்க வைத்த காட்சி இது. சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் அப்புக்குட்டியை தன் தம்பியாகவே அஜித் நினைத்திருக்கிறார் என்பதற்கு இப்போது நடந்திருக்கும் சம்பவமே சாட்சி.

ஆம்... அப்புக்குட்டியை விதவிதமாகவே அஜித் எடுத்த புகைப்படங்கள்தான் இப்போது இணையதளத்தை கலக்கிக் கொண்டிருக்கின்றன. சாதாரண அப்புக்குட்டியை ‘இன்டர்நேஷனல்’ சிவபாலனாக மாற்றியிருக்கிறது அஜித்தின் கேமரா கண்கள். இப்படி ஒரு எண்ணம் அஜித்திற்கு எப்படி வந்தது என ஒவ்வொருவரும் ஆச்சரியத்தில் இருக்கின்றனர். தன் வாழ்நாளில் இது ஒரு மறக்க முடியாத சம்பவம் என அப்புக்குட்டியும்... ஸாரி... சிவபாலனும் கண்களில் நீர் கசிய நன்றி கூறியுள்ளார்.

அதனாலதான்யா... நீ தல!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;