‘ஐ’ படப் பாணியில் ‘புலி’ ஆடியோ விழா!

‘ஐ’ படப் பாணியில் ‘புலி’ ஆடியோ விழா!

செய்திகள் 30-Jun-2015 2:00 PM IST VRC கருத்துக்கள்

விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் டீஸர் கடந்த 21-ஆம் தேதி வெளியாகி பெரும் சாதனை படைத்துள்ளது. 21-ஆம் தேதி வெளியான ‘புலி’ டீஸரை இதுவரையில் 45 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். விஜய் நடித்த படங்களில் இது மிகப் பெரிய சாதனை! இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ள ‘புலி’ படக்குழுவினர் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மிகப் பிரம்மாண்டமான முறையில் வருகிற ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர். ஷங்கரின் ‘ஐ’ பட ஆடியோ வெளியீட்டு விழா பாணியில் ‘புலி’ பட ஆடியோ விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இப்போது அதற்கான இடத்தை தேர்வு செய்வதில் ‘புலி’ படக்குழுவினர் ஈடுபட்டுள்ளார்கள்.

ஷங்கரின் ‘ஐ’ பட ஆடியோ வெளியீட்டு விழா சென்னை, நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அநேகமாக ‘புலி’ ஆடியோ வெளியீட்டு விழாவும் இங்குதான் நடைபெறும் என்கிறார்கள். காரணம் சென்னையில் இருக்கும் அரங்கங்களில் இந்த அரங்கம் தான் மிகப் பெரியது. ஆக, ‘புலி’ பட ஆடியோ விழா சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - சேராமல் போனால் பால் வீடியோ


;