வசூல் சாதனை! வருகிறது ‘இன்று நேற்று நாளை’ 2-ஆம் பாகம்!

வசூல் சாதனை! வருகிறது  ‘இன்று நேற்று நாளை’ 2-ஆம் பாகம்!

செய்திகள் 30-Jun-2015 10:09 AM IST VRC கருத்துக்கள்

சி.வி.குமாரின் ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும், கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனமும் இணைந்து தயாரித்த படம் ‘இன்று நேற்று நாளை’. அறிமுக இயக்குனர் ரவிக்குமார் இயக்கிய இப்படத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் முதலானோர் நடித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் மூன்று நாட்களில் 3 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அபினேஷ் இளங்கோவனின் ‘அபி & அபி’ நிறுவனம் சார்பாக 150 தியேட்டர்களில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களின் எகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து மேலும் பல தியேட்டர்களில் இப்படத்தை வெளியிடப்பட்டுள்ளது.

‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பின்போதே இரண்டாம் பாகத்தின் கதை உறுதி செய்யப்பட்டது. இரண்டாம் பாகத்தில் பிரபல நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளனர். இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திரி - டிரைலர்


;