புலி டீஸர் : சாதனையும் சோதனையும்!

புலி டீஸர் : சாதனையும் சோதனையும்!

செய்திகள் 30-Jun-2015 9:40 AM IST Chandru கருத்துக்கள்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் நடிக்கும் ‘புலி’ படத்தின் டீஸர் கடந்த 21ஆம் தேதி மதியம் யு டியூப்பில் வெளியிடப்பட்டது. எஸ்கேடி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தின் டீஸர் வெளியானது முதலே பல சாதனைகளைப் படைத்து வருகிறது. அந்தவகையில் கிட்டத்தட்ட 8 நாட்களில் இந்த டீஸர் இதுவரை 45 லட்சத்திற்கும் மேற்பட்டமுறை பார்வையிடப்பட்டுள்ளது. விஜய் படங்களிலேயே இதுதான் அதிகபட்சம். அதோடு மேலும் ஒரு சாதனையையும் செய்திருக்கிறது இந்த ‘புலி’ டீஸர்.

தென்னிந்திய அளவில் டீஸர்/டிரைலர்களுக்கு கிடைத்திருக்கும் தனிப்பட்ட ‘லைக்’குகளில் (Likes) 3வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது ‘புலி’ டீஸர். 53,400 லைக்குகளைப் பெற்று 3வது இடத்திலிருந்த ‘ஐ’ டிரைலரை, 53700 லைக்குகள் பெற்று பின்னுக்குத் தள்ளி 3ம் இடத்தைக் கைப்பற்றியிருக்கிறது ‘புலி’ டீஸர். 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளுடன் இரண்டாம் இடத்தில் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டிரைலரும், 94 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளுடன் ‘என்னை அறிந்தால்’ டீஸர் முலிடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒருபுறம் சாதனையைச் செய்திருந்தாலும், இன்னொருபுறம் சோதனையையும் சந்தித்திருக்கிறது ‘புலி’ டீஸர். ஆம்... அதிக லைக்குகளைப் பெற்றதோடு அல்லாமல், அதிக டிஸ்லைக்குகளையும் (Dislikes) பெற்றிருக்கிறது ‘புலி’ டீஸர். முதல்முறையாக 10,000 டிஸ்லைக்குகளைப் பெற்ற டீஸர் என்ற சோதனைக்கும் உட்பட்டிருக்கிறது ‘புலி’ டீஸர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புலி - மேக்கிங் வீடியோ


;