ரேடியோ ஜாக்கியாக மாறும் ‘மெட்ராஸ்’ ரித்விகா!

ரேடியோ ஜாக்கியாக மாறும் ‘மெட்ராஸ்’ ரித்விகா!

செய்திகள் 30-Jun-2015 9:19 AM IST Chandru கருத்துக்கள்

கார்த்தி நடிப்பில் வெளிவந்து பல விருதுகளை வென்ற ‘மெட்ராஸ்’ படத்தில் நடிகர் கலையரசனின் மனைவியாக நடித்தவர் ரித்விகா. எந்தவிதமான மேக்&அப்பும் இல்லாமல், முழுப்படத்திலும் நைட்டியிலேயே வலம் வந்த ரித்விகாவின் நடிப்பிற்கு விமர்சகர்களிடம் பெரிய பாராட்டு கிடைத்தது. அதோடு சமீபத்தில் நடந்து முடிந்த 62வது ஃபிலிம்ஃபேர் விருது விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருதை ‘மெட்ராஸ்’ படத்திற்காகப் பெற்று ஆச்சரியப்படுத்தினார் ரித்விகா.

தற்போது அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடிக்கும் ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரித்விகா. இதிலும் அவருக்கு குணச்சித்திர வேடம்தான். இப்படத்தில் ரேடியோ ஜாக்கியாக (ஆர்ஜே) நடிக்கிறாராம் அவர். இதற்காக சென்னையிலுள்ள பிரபல எஃப்.எம். ரேடியோ ஸ்டேஷன் ஒன்றிற்குச் சென்று இரண்டு வார காலம் பயிற்சியும் எடுத்துக் கொண்டாராம். இந்த ஆர்ஜே கேரக்டருக்கும் பெரிய அளவில் ‘அப்ளாஸ்’ கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ரித்விகா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;