கல்லூரிப் பெண் சமந்தாவை காதலிக்கும் விஜய்?

கல்லூரிப் பெண் சமந்தாவை காதலிக்கும் விஜய்?

செய்திகள் 29-Jun-2015 12:50 PM IST Chandru கருத்துக்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 59’ படத்திற்கான பூஜை கடந்த 26ஆம் தேதி சென்னை ஈசிஆரில் நடைபெற்றது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். ‘கத்தி’ படத்திற்குப் பிறகு விஜய்யுடன் 2வது முறையாக நடிக்கும் சமந்தா இப்படத்தில் கல்லூரிப் பெண்ணாக நடிக்கவிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கின்றன.

ஏற்கெனவே ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘அஞ்சான்’ படங்களிலும் கல்லூரிப் பெண்ணாக சமந்தா நடித்திருக்கிறார். ‘ராஜா ராணி’யைத் தொடர்ந்து அட்லி இயக்கும் படம் என்பதால் அதைப்போலவே இதுவும் ஒரு காதல் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் கல்லூரிப் பெண் சமந்தாவை ஹீரோ விஜய் காதலித்தாலும் காதலிக்கலாம் என்கிறார்கள்.

இப்படத்திற்கு ரஜினியின் பிரபல படத்தலைப்பான ‘மூன்று முகம்’ டைட்டில் வைக்கப்படலாம் என்கிறார்கள். ‘தலைவா’ படத்திற்குப் பிறகு ‘விஜய் 59’ படத்தில் விஜய்யுடன் மீண்டும் இணைந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இது ஜி.வி. இசையமைப்பில் உருவாகும் 50வது படம். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இறவாகாலம் - டீசர்


;