சிம்பு 5, தனுஷ் 15, விஜய் 45

சிம்பு 5, தனுஷ் 15, விஜய் 45

செய்திகள் 29-Jun-2015 12:09 PM IST Chandru கருத்துக்கள்

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா நடித்திருக்கும் ‘வாலு’ படமும், பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடித்திருக்கும் ‘மாரி’ படமும் ஜூலை 17ஆம் தேதி ரிலீஸாகவிருக்கின்றன. இந்நிலையில் ‘மாரி’ படத்தின் டிரைலர் கடந்த 25ஆம் தேதி மாலை 6 மணி அளவில் யு டியூப்பில் வெளியிடப்பட்டது. தற்போது இந்த டிரைலர் வெளியாகி 4 நாட்களுக்குள்ளாகவே 15 லட்சம் பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது. தனுஷ் படங்களின் டீஸர்/டிரைலரைப் பொறுத்தவரை ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் டிரைலர் 30 லட்சம் பார்வையாளர்களை எட்டியிருப்பதே அதிகபட்ச சாதனை. இந்த சாதனையை ‘மாரி’ டிரைலர் முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதேபோல் ‘வாலு’ படத்தின் 2வது டிரைலர் கடந்த 27ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து சிம்பு படம் ரிலீஸாகவிருப்பதால் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்புள்ளது. இதனால் இந்த டிரைலரை 40 மணி நேரத்தில் 5 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். சிம்பு பட டீஸர்/டிரைலர்களில் ‘இது நம்ம ஆளு’ படத்தின் டீஸரை 42 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளதே அதிகபட்ச சாதனை.

கடந்த 21ஆம் தேதி வெளியான ‘புலி’ டீஸரும் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்த டீஸர் வெளியான முதல் 21 மணி நேரத்தில் 10 லட்சம் பார்வையாளர்களையும், 33 மணி நேரத்தில் 15 லட்சம் பார்வையாளர்களையும், 45 மணி நேரத்தில் 20 லட்சம் பார்வையாளர்களையும், 82 மணி நேரத்தில் 30 லட்சம் பார்வையாளர்களையும் கடந்த ‘புலி’ டீஸர் தற்போது ஒரு வாரம் கடந்த நிலையில் கிட்டத்தட்ட 45 லட்சம் பார்வையாளர்களைச் சென்றடைந்திருக்கிறது. விஜய் படங்களின் டீஸர்/டிரைலர்களிலேயே இதுதான் அதிகபட்சம். தவிர, இந்த டீஸர் மேலும் பல சாதனைகளைப் படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;