கார்த்தியின் நல்ல மனசு! - நன்றி தெரிவித்த மாணவிகள்

கார்த்தியின் நல்ல மனசு! - நன்றி தெரிவித்த மாணவிகள்

செய்திகள் 29-Jun-2015 10:21 AM IST Chandru கருத்துக்கள்

அப்பா நடிகர் சிவகுமாரைப்போலவே நடிகர்கள் சூர்யாவும், கார்த்தியும் தொடர்ந்து சமூக, கல்வி நலத்திட்டங்களில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். 30 வருடங்களாக சிவகுமார் நடத்திவந்த ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் பணிகளை நடிகர் சூர்யா துவங்கிய ‘அகரம் ஃபவுண்டேஷன்’ தொடர்ந்து கவனித்து வருகிறது. இந்த அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு வருடமும் பல்வேறு கல்விப் பணிகளை செய்து வருகின்றனர் சிவகுமார் குடும்பத்தினர்.

அதேபோல் சூர்யாவும் ‘அகரம் ஃபவுண்டேஷன்’ மூலம் ஏழை மாணவ, மாணவிகளை படிக்க வைத்து வருகின்றார். அப்பா, அண்ணனுடன் இணைந்து சமூகப் பணிகள் செய்வதோடு, தனிப்பட்ட முறையிலும் தன்னால் இயன்ற நலத்திட்டப் பணிகளை செய்து வருகிறார் நடிகர் கார்த்தி.

சென்னை தி.நகரிலுள்ள குண்டூர் சுப்பையாபிள்ளை பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு புதிதாக கழிவறைகள் கட்டிக் கொடுத்திருக்கிறார் நடிகர் கார்த்தி. தங்கள் பள்ளிக்கு நீண்டகாலமாக இருந்துவந்த குறையை, தானாக முன்வந்து தீர்த்துவைத்த நடிகர் கார்த்தியை, குண்டூர் சுப்பையாபிள்ளை பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களும், மாணவிகளும் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மலர்க்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;