‘‘நான் அவருக்கு நிகரும் அல்ல... போட்டியும் அல்ல!’’ - விவேக்

‘‘நான் அவருக்கு நிகரும் அல்ல... போட்டியும் அல்ல!’’ - விவேக்

செய்திகள் 29-Jun-2015 9:52 AM IST Chandru கருத்துக்கள்

ஜூலை 3ஆம் தேதி கமல், கௌதமி நடித்து, ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கும் ‘பாபநாசம்’ படம் திரைக்கு வருகிறது. இதேநாளில் பேபி, பரஞ்ஜோதி, ஒரு தோழன் ஒரு தோழி ஆகிய படங்களும் வெளியாகவிருக்கின்றன. அதோடு நடிகர் விவேக் ஹீரோவாக நடித்திருக்கும் ‘பாலக்காட்டு மாதவன்’ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதிதான் வெளியாகிறது. இந்த செய்தியை தவறாக சித்திரிக்கும் பொருட்டு ஒரு சில இணையதளங்களில் ‘‘கமலுடன் போட்டிபோடும் விவேக்!’’ என்ற தொணியில் அர்த்தப்படுத்தி செய்திகள் வெளியிட்டனர்.

இதனைக்கண்டு வருத்தமடைந்த நடிகர் விவேக், இதற்கு விளக்கமளிக்கும் வகையில் ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார். அதில், ‘‘கமலுடன் போட்டி என்று வரும் செய்திகள் வருத்தம் அளிக்கின்றன. 2 படங்களும் வரும் தேதி ஜூலை 3. அவ்வளவுதான். அவருக்கு நான் போட்டியும் அல்ல நிகரும் அல்ல!’’ என்று குறிப்பட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மீசைய முறுக்கு - trailer


;