சூப்பர்ஸ்டார் படத்தில் இணையும் சமந்தா, காஜல் அகர்வால்!

சூப்பர்ஸ்டார் படத்தில் இணையும் சமந்தா, காஜல் அகர்வால்!

செய்திகள் 29-Jun-2015 9:06 AM IST Chandru கருத்துக்கள்

தனுஷுடன் காஜல் அகர்வால் நடித்த ‘மாரி’ படம் ஜூலை 17ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதேபோல் காஜலின் இன்னொரு தமிழ்ப்படமான விஷாலின் ‘பாயும் புலி’ படத்தின் படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்துவிட்டன. இதனால் தன்னுடைய அடுத்த தமிழ்ப் படத்தை எதிர்நோக்கியிருந்த காஜலுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. ஆம்... தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு தமிழில் முதன்முறையாக நடிக்கும் ‘பிரம்மோத்சவம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் காஜல் அகர்வால்.

தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் உருவாகும் இப்படத்தில் காஜலுடன் இணைந்து நடிகை சமந்தாவும், ப்ரணிதாவும் நடிக்கிறார்கள். மூன்று நாயகிகளுடன் உருவாகவிருக்கும் இப்படத்தில் மகேஷ்பாபுவின் பெற்றோராக சத்யாராஜும், ரேவதியும் நடிக்கிறார்கள். தெலுங்கு இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் முதல் தொடங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;