காவல் – விமர்சனம்

‘காவல்’ போராட்டம்!

விமர்சனம் 27-Jun-2015 3:58 PM IST Top 10 கருத்துக்கள்

Production : SG Films Pvt Ltd
Direction : Nagendran R
Starring : Vimal, Samuthirakani, Gheetha, Deva, MS Baskar
Music : G. V. Prakash Kumar
Cinematography : N. K. Ekambaram
Editing : Praveen K. L

’நீயெல்லாம் நல்லா வருவேடா’ என்ற டைட்டிலுடன் படப்பிடிப்பு துவங்கி, பிறகு ‘காவல்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இப்படம் என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

சென்னையை ஆட்டி படைக்கும் கூலிப் படை தலைவன் தேவா. பட்டினம்பாக்கத்தில் இருந்து செயல்படும் இவனிடமிருந்து பணத்தை வாங்கி அவனுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள் அந்த ஏரியா போலீஸ் அதிகாரிகள் எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிஙகமுத்து முதலானோர்! இந்நிலையில் தேவாவை என்கவுண்டரில் போட்டுத்தள்ளும் பொறுப்புடன் பட்டினம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு வருகிறார் சமுத்திரகனி! என்கவுண்டர் விஷயம் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் விமல் மூலம் தேவாவுக்கு தெரிய வர, அவன் தப்பித்து விடுகிறான்! தேவா தப்பிக்க, விமலும் அவனது கூட்டாளிகளும் தான் காரணம் என்பதை கண்டு பிடிக்கிறார் சமுத்திரகனி. இதையறியும் விமலும் அவனது நண்பர்களும் போலீஸிடமிருந்து தப்பிக்க தலைமறைவாகிறார்கள். இந்நிலையில் விமலை வைத்தே தேவாவை சிக்க வைக்க திட்டமிட்டு அவரை தேடுகிறார் சமுத்திரகனி! அந்நேரம் தன்னை போலீஸில் சிக்க வைக்க முயற்சி செய்வது விமல் தான் என்று நினைத்து தேவாவும் விமலை தேடுகிறார். இந்த ஆடுபுலி ஆட்டத்தின் கிளைமேக்ஸ் என்ன என்பதே காவல்.

படம் பற்றிய அலசல்

நாம் எத்தனையோ படங்களில் பார்த்த என்கவுண்டர் கதை தான்! அதை லாஜிக் விஷயங்கள் பற்றி எல்லாம் கவலைப்படாமல் திரைக்கதையில் சில திருப்பங்களை வைத்து, போரடிக்க வைக்காத வகையில் இயக்கியிருக்கிறார் நாகேந்திரன். இளங்கன்று பயமறியாது என்பது போல் விமல் கூலிப்படை தலைவன் தேவாவுடன் நெருக்கமாவதால் ஏற்படும் விளைவுகளை தன்னையறியாமல் வழிதவறி செல்லும் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பாடமாக சொல்லியுள்ளார் இயக்குனர். அதற்காக அவருக்கு ஒரு சபாஷ் போடலாம்! நாகேந்திரனின் இயக்கத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமாரின் பின்னணி இசையும், ஏகாமபர்த்தின் ஒளிப்பதிவும் பக்க பலமாக அமைந்துள்ள விஷயங்கள்!

நடிகர்களின் பங்களிப்பு

இந்த படத்தின் கதாநாயகன் விமல் என்றாலும் நடிப்பிலாகட்டும், பாடி லாங்வேஜிலாகட்டும் போலீஸ் அதிகாரியாக வரும் சமுத்திரகனியும், வில்லனாக வரும் தேவாவும் தான் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்கள். காதல் காட்சிகளில் நம்மை கவரும் விமல் ஆக்‌ஷன் காட்சிகளில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். விமலின் காதலியாக வரும் ‘புன்னகைப்பூ’ கீதாவின் நடிப்பு ஓகே ரகம்! வசூல் மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படும் போலீஸ் அதிகாரிகளாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து முதலானோரின் அலப்பறைகள் கொஞ்சம் ஓவர் என்றாலும் ரசிக்க முடிகிறது.

பலம்

1.எடுத்துக் கொண்ட கதையை போரடிக்காமல் இயக்கியிருக்கும் விதம்
2. கதையோட்டத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ள ஜி.வி.பிரகாஷின் இசையும், ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும்
3. கதையுடன் ஒட்டிச் செல்லும் பொழுது போக்கு அம்சங்கள்

பலவீனம்

1.அழதபரசான கதையை தேர்ந்தெடுத்திருப்பது
2. லாஜிக் விஷயங்களை பற்றி கவலைப்படாதது
3.படத்தில் இடம்பெறும் அதிகபடியான வன்முறை காட்சிகள்

மொத்தத்தில்

வன்முறை பட விரும்பிகளுக்கு ஏற்ற படம்!

ஒருவரி பஞ்ச்: ‘காவல்’ போராட்டம்!

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பஞ்சுமிட்டாய் ட்ரைலர்


;