மகிமா கைவசம் 4 படங்கள்!

மகிமா கைவசம் 4 படங்கள்!

செய்திகள் 27-Jun-2015 12:41 PM IST VRC கருத்துக்கள்

பிரபு சாலமன் தயாரிப்பில் அன்பழகன் இயக்கிய ‘சாட்டை’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மகிமா. முதல் படத்திலேயே நல்ல நடிகை என்ற பாராட்டு இவருக்கு கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு மகிமாவுக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அப்படங்களில் மகிமா நடிக்கவில்லை. இது குறித்து மகிமா கூறும்போது,

‘‘சாட்டை’ படத்திற்கு பிறகு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது உண்மையே. ஆனால் அப்போது நான் படித்துக் கொண்டிருந்ததால் அப்படங்களில் நடிக்க முடியவில்லை. இப்பத்தான் படிப்பை முடித்தேன். சமீபத்தில் நான் நடித்த ‘மொசக்குட்டி’, ‘அகத்திணை’ ஆகிய படங்கள் ரிலீஸானது. அப்படங்களை தொடர்ந்து இப்போது விஜய்சேதுபதியுடன் ‘மெல்லிசை’, தினேஷுடன் ‘அண்ணனுக்கு ஜே’, ‘புரவி 150-CC’ ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். அத்துடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்பூரி என ஐந்து மொழிகளில் உருவாகும் ஒரு படத்திலும் நடிக்கிறேன். இதில் பிரபல தெலுங்கு இயக்குனர் பூரிஜெகன் நாத் சார் தம்பி சாய்ராம் சங்கர்தான் ஹீரோ. இப்படத்தை வினோத் விஜயன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. என்னை பொறுத்தவரை எத்தனை படங்களில் நடித்தேன் என்பது முக்கியமில்லை. நடித்ததில் நல்ல படங்கள் எத்தனை என்பது தான் முக்கியம். படிப்பை முடித்ததால் இனி நடிப்பில் தான் என் கவனம் இருக்கும்’’ என்றார் மகிமா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - GST பாடல் வீடியோ


;