போட்டியின்றி தேர்வாகினார் விக்ரமன்!

போட்டியின்றி தேர்வாகினார் விக்ரமன்!

செய்திகள் 27-Jun-2015 11:41 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். 2015-2017-ஆம் ஆண்டுக்கான தேர்தல் ஜூலை 5-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த சங்கத்தில் தற்போது தலைவராக இருக்கும் விக்ரமன், துணை தலைவர்களாக இருக்கும் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், செயலாளராக இருக்கும் ஆர்.கே.செல்வமணி, பொருளாளராக இருக்கும் வி.சேகர் ஆகியோர் மீண்டும் அதே பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்தனர். ஆனால் இவர்களை ஏதிர்த்து போட்டியிட யாரும் முன்வரவில்லை!. இதனால் விக்ரமன், பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், ஆர்.கே.செல்வமணி, வி.சேகர் ஆகியோர் அதே பதவிகளுக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரியாக இருக்கும் வக்கீல் செந்தில்நாதன் நேற்று அறிவித்தார். இணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஜூலை 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. போட்டியின்றி தேர்வாகியுள்ள அனைவருக்கும் ‘டாப் 10 சினிமா’வின் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிவலிங்கா - டிரைலர்


;