ஃபிலிம்ஃபேர் விருதுகள் : சாதித்த மெட்ராஸ், கத்தி, விஐபி!

ஃபிலிம்ஃபேர் விருதுகள் : சாதித்த மெட்ராஸ், கத்தி, விஐபி!

செய்திகள் 27-Jun-2015 10:20 AM IST Chandru கருத்துக்கள்

தென்னிந்திய விருதுகளில் ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்கு எப்போதுமே தனி மரியாதை உண்டு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் வெளிவரும் படங்களுக்கு மொழிவாரியாக ஒவ்வொரு வருடமும் விருதுகள் வழங்கப்படுவது இவ்விழாவின் சிறப்பு. இந்தமுறை தமிழ்ப் படங்களுக்கான நாமினேஷன் பட்டியலில் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படம் 7 பிரிவுகளில் இடம்பெற்றது. அதில் தற்போது 2 விருதுகளை வென்றிருக்கிறது விஐபி. அதேபோல் ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘மெட்ராஸ்’ திரைப்படத்துக்கு 4 விருதுகளும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ படத்திற்கு 2 விருதுகளும், விஜய் இயக்கத்தில் வெளிவந்த ‘சைவம்’ படத்திற்கு 2 விருதுகளும் கிடைத்துள்ளன.

முழுமையான பட்டியல் (தமிழ்ப் படங்கள்)

சிறந்த நடிகர் - தனுஷ் (வேலையில்லா பட்டதாரி)
சிறந்த நடிகை - மாளவிகா (குக்கூ)
சிறந்த நடிகர் (விமர்சன ரீதியாக) - கார்த்தி (மெட்டராஸ்)
சிறந்த படம் - கத்தி
சிறந்த இயக்குனர் - ஏ.ஆர்.முருகதாஸ் (கத்தி)
சிறந்த துணை நடிகர் - பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)
சிறந்த துணை நடிகை - ரித்விகா (மெட்ராஸ்)
வாழ்நாள் சாதனையாளர் விருது - ஐவி சசி
சிறந்த பின்னணிப் பாடகர் - பிரதீப் குமார் (மெட்ராஸ் படத்தின் ‘ஆகாயம் தீப்பிடிச்சா’)
சிறந்த பின்னணிப் பாடகி - உத்ரா உன்னிகிருஷ்ணன் (சைவம்)
சிறந்த இசையமைப்பாளர் - அனிருத் (வேலையில்லா பட்டதாரி)
சிறந்த பாடலாசிரியர் - நா.முத்துக்குமார் (சைவம்)
சிறந்த அறிமுக நடிகை - கேத்ரின் தெரஸா (மெட்ராஸ்)
சிறந்த அறிமுக நடிகர் - துல்கர் சல்மான் (வாயை மூடி பேசவும்)
சிறந்த ஒளிப்பதிவாளர் - ஷோபி (கத்தி)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்பைடர் - டிரைலர்


;