நடிகர் சங்க தேர்தலுக்கு நீதிமன்றம் தடை!

நடிகர் சங்க தேர்தலுக்கு நீதிமன்றம் தடை!

செய்திகள் 26-Jun-2015 1:07 PM IST VRC கருத்துக்கள்

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைவதையொட்டி இந்த சங்கத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட படி ஜுலை 15-ஆம் தேதி தேர்தலை நடத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது.

நடிகர் சங்க தேர்தலை நடத்த தடை விதிக்கக்கோரி விஷால் உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் இப்போது தேர்தலுக்கு தடை விதித்துள்ளனர். இது சம்பந்தமாக நடிகர் விஷால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ஜூலை 15-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 26-ல் தொடங்குகிறது. தேர்தல் நடைபெறும் நாள் வேலை நாள் என்பதால் தேர்தல் தேதியை மாற்றவேண்டும் என்றும், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும்" குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ள நடிகர் சங்க தேர்தல் இனி எப்போது நடக்கும் என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்! இது சம்பந்தமாக தற்போது நடிகர் சங்க தலைவராக இருக்கும் சரத்குமார் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போகிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;