விஜய் - அட்லி பட புதிய தகவல்கள்!

விஜய் - அட்லி பட புதிய தகவல்கள்!

செய்திகள் 26-Jun-2015 12:44 PM IST VRC கருத்துக்கள்

‘புலி’ படத்தை தொடர்ந்து, அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய்! கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தின் துவக்க விழா இன்று காலை சென்னை ஈ.சி.ஆர்.ரோட்டில் உள்ள கேரளா ஹவுஸில் சிறப்பாக நடைபெற்றது. பெரும்பாலும் பேன்ட் சட்டை அணிந்து வரும் விஜய் இந்த பட விழாவிற்கு வேட்டி சட்டை அணிந்து வந்தது வித்தியாசமாக இருந்தது. இந்த விழாவில் விஜய்யுடன் இயக்குனர் அட்லி, தயரிப்பாளர் எஸ்.தாணு, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், பிரபு, இயக்குனர் மகேந்திரன் விஜய்யின் தந்தை எஸ்.ஏஸ்.சந்திரசேகரன், தாயார் ஷோபா சந்திரசேகரன், உட்பட பல திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர்.

இப்படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன், பிரபு, ராதிகா, இயக்குனர் மகேந்திரன், ஸ்டன்ட் மாஸ்ட்ர் சில்வா ஆகியோருடன் நடிகை மீனாவின் குழந்தை நைனிகாவும் நடிக்கிறார். கிட்டத்தட்ட 15 அண்டுகளுக்கு முன் மீனா, விஜய்யுடன் ‘ஷாஜகான்’ படத்தில் நடனம் ஆடினார். மீனாவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகி நடிகையானவர் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது மீனாவைப் போல் அவரது மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். இவர்களுடன் இயக்குனர் மகேந்திரனும் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

இந்த படம் குறித்து இயக்குனர் அட்லி கூறும்போது, ‘‘நான் விஜய் சாரின் தீவிர ரசிகன்! ‘நண்பன்’ படத்தில் ஷங்கர் சாருடன் பணியாற்றும்போது விஜய் சாருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் சாரை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. ஆனால் ஒரு வெற்றிப் படத்தை கொடுத்த பிறகு தான் அவரிடம் செல்ல வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அதன் படி ‘ராஜா ராணி’ வெற்றிப் படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து விஜய் சாரை சந்தித்து இந்த கதையை சொன்னேன். அப்போது அவர் ‘முதலிலேயே என்னிடம் வந்திருக்கலாமே’’ என்றார்.

இந்த படம் குடுமபத்தினர் அனைவரும் பார்க்க கூடிய வகையிலான ஒரு ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும். அந்த காலத்து படங்களில் எம்..ஜி.ஆர். ஏற்று நடிக்கும் கேரக்டர்கள் எப்படி இருக்குமோ அதைப் போல எல்லோருக்கும் பிடிக்கும் வகையிலான ஒரு கேரக்டரில் நடிக்கிறார் விஜய் சார். இது எந்த படத்தின் ரீ-மேக்கும் இல்லை. புதிய கதை தான்! இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். அவர் படத்திற்கான எல்லா ட்யூன்களையும் கொடுத்து விட்டார். அவரது 50 -ஆவது படம் என்று சொல்லும் அளவிற்கு இப்படத்தின் ஆல்பம் சிறப்பாக அமையும். அடுத்த மாதம் துவங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் வரைக்கும் போகும்’’ என்றார் அட்லி.

‘கலைப்புலி’ எஸ்.தாணு படம் குறித்து பேசும்போது, ‘‘விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தை விட இப்படம் பல மடங்கு சிறந்த படமாக இருக்கும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;