அதிகாரபூர்வமாக உறுதியானது மாரி-வாலு மோதல்!

அதிகாரபூர்வமாக உறுதியானது மாரி-வாலு மோதல்!

செய்திகள் 25-Jun-2015 12:57 PM IST VRC கருத்துக்கள்

தனுஷ், காஜல் அகர்வால் இணைந்து நடித்திருக்கும் படம் ‘மாரி’. இப்படத்தை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். ஏற்கெனவே இப்படத்தின் டீஸரும், பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ‘மாரி’யின் டிரைலர் இன்று மாலை வெளியாகவிருக்கிறது. இதனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தனுஷ் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சி தரும் விதமாக இப்படத்தின் ரிலீஸ் தேதியையும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சரத்குமார்! ஏற்கெனவே ‘மாரி’ ஜூலை 17-ல் ரிலீசாகிறது என்று நமது இணைய தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம், இப்போது அந்த செய்தி அதிகாரபூவமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே தினம் தான் சிம்பு நடித்திருக்கும் ‘வாலு’ படமும் வெளியாகிறது. சிம்புவின் ‘வாலு’ ஏற்கெனவே பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு, அந்த தேதிகளில் ரிலீசாகவில்லை! ஆனால் இப்போது ‘வாலு’வின் ரிலீஸ் தேதியை சிம்புவே உறுதி செய்து, அது சம்பந்தமான விளம்பரங்களும் வந்து கொண்டிருப்பதால் நிச்சயமாக ‘வாலு’ படமும் 17-ஆம் தேதி ரிலீசாகும் என்று உறுதியாகியிருக்கிறது. ஒரே நாளில் தனுஷ், சிம்பு நடித்த படங்கள் வெளியாவதால் அவர்களது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தனுஷ், சிம்பு நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;