‘விஜய் 59’ நாளை பிரம்மாண்ட பூஜை!

‘விஜய் 59’ நாளை பிரம்மாண்ட பூஜை!

செய்திகள் 25-Jun-2015 10:56 AM IST VRC கருத்துக்கள்

‘புலி’ படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் 59-ஆவது படத்தின் துவக்க விழா நாளை காலை சென்னை ஈ.சி.ஆர்.ரோட்டில் உள்ள கேரளா ஹவுஸில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிற்து. ‘கலைப்புலி’ எஸ்​. தாணு பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் இப்படத்தை அட்லீ இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடிக்கிறார்கள். அட்லீ இயக்கிய ‘ராஜா ராணி’ படத்திற்கு இசை அமைத்த ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இப்படம் அவரது 50-ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ‘துப்பாக்கி’ படத்தை தொடர்ந்து கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ​ நாளை நடைபெறவிருக்கும் பூஜையை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;