12 ட்வீட், 20 லட்சம் பேர் - ரஜினி ராக்ஸ்!

12 ட்வீட், 20 லட்சம் பேர் - ரஜினி ராக்ஸ்!

செய்திகள் 25-Jun-2015 10:47 AM IST Chandru கருத்துக்கள்

ஒரு படம் வெளிவருவதற்கே குறைந்தது 3 வருடங்கள் ஆகும். அதேபோல் பொதுவிழாவில் கலந்துகொள்வதும் ரொம்பவே அரிதானதுதான். அப்படியிருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினி, இன்றைய இளைஞர்களின் கனவுலகமாக இருக்கும் ட்விட்டரில் இணைந்தபோது, அதை இந்திய சினிமாவே கொண்டாடியது. கடந்த வருடம் ‘கோச்சடையான்’ பட வெளியீட்டை முன்னிட்டு மார்ச் 5ஆம் தேதி ட்விட்டரில் அதிகாரபூர்வமாக இணைந்தார் ரஜினிகாந்த்.

தங்களின் இணையதளத்தில் சூப்பர்ஸ்டார் இணைந்ததை முன்னிட்டு, ட்விட்டர் தளமே தங்களுடையே முதல் பக்கத்தில் சூப்பர்ஸ்டாரின் புரொபைலை வைத்து கௌரவித்தது. இந்திய அளவில் பிரதமர் மோடி, பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் உட்பட பலபேர் ரஜினியை டிஜிட்டல் உலகத்திற்கு வரவேற்றனர். அன்று தொடங்கிய ரஜினியின் பயணத்தில் தற்போது 20 லட்சம் பாலோயர்ஸ் என்ற மைல்கல்லை எட்டியிருக்கிறார் ரஜினி. இத்தனைக்கும் இந்த 15 மாதங்களில் ரஜினி செய்திருக்கும் ட்வீட் மொத்தமே 12தான். அதுதான் ரஜினி!

(தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமே ரஜினியைவிட அதிக அளவிலான பாலோயர்களைக் கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட 79 லட்சம் பாலோயர்களைக் கொண்டிருக்கும் ரஹ்மான் நீண்ட காலமாக ட்விட்டரில் இருக்கிறார். அதோடு தினந்தோறும் ட்வீட் செய்யும் வழக்கத்தையும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷா, தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத் ஆகியோருக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோயர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது).

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;