‘சூது கவ்வும்’ தாஸ் கேரக்டரை மிஸ் செய்த வடிவேலு?

‘சூது கவ்வும்’ தாஸ் கேரக்டரை மிஸ் செய்த வடிவேலு?

செய்திகள் 25-Jun-2015 10:19 AM IST Chandru கருத்துக்கள்

குறும்பட இயக்குனராக இருந்து தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான நலன் குமாரசாமியின் அறிமுகப் படம் ‘சூது கவ்வும்’. இப்படத்தில் தாஸ் என்ற 40 வயது கடத்தல்காரராக விஜய் சேதுபதி நடித்திருந்தார். வித்தியாசமான 5 ரூல்ஸ்களோடு கடத்தலைச் செய்யும் தாஸ் கேரக்டருக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. ‘பிளாக் காமெடி’ வகையறாவைச் சேர்ந்த இந்தக் கதையை உருவாக்கிவிட்டு அதில் நாயகனாக நடிக்க இயக்குனர் நலன் குமாரசாமி முதலில் வடிவேலுவைத்தான் யோசித்து வைத்திருந்தாராம். ஆனால், அப்போது வடிவேலு உச்சத்திலிருந்ததால், நலனால் அவரை தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை. இதனால் வேறு வழியின்றி வேறொரு நாயகனை நடிக்க வைக்கலாம் என என் எண்ணத்தை மாற்றியிருக்கிறார்.

அதன்பிறகு கதையில் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்து விஜய்சேதுபதியை நடிக்க வைத்திருக்கிறார் நலன் குமாரசாமி. ஒருவேளை அந்த கேரக்டரில் வடிவேலு நடித்திருந்தால் ஹீரோவாக அவருக்கு மிகப்பெரிய ‘பிரேக்’ கிடைத்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

(தற்போது விஜய்சேபதியை வைத்து தனது இரண்டாவது படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் நலன் குமாரசாமி)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜூலி 2 - டிரைலர்


;