‘யூத்’ விஜய் பாணியில் ‘கவலை வேண்டாம்’ ஜீவா!

‘யூத்’ விஜய் பாணியில் ‘கவலை வேண்டாம்’ ஜீவா!

செய்திகள் 25-Jun-2015 8:53 AM IST Chandru கருத்துக்கள்

‘யான்’ படத்திற்குப் பிறகு தற்போது 3 படங்களில் பிஸியாக இருக்கிறார் ஜீவா. ‘அம்பா சமுத்திரம் அம்பானி’ பி.எஸ்.ராம்நாத் இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து ‘திருநாள்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஜீவா, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ இயக்குனர் ராம் பிரகாஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும், ‘யாமிருக்க பயமே’ டீகேயின் இயக்கத்தில் ‘கவலை வேண்டாம்’ படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் ‘கவலை வேண்டாம்’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ‘யூத்’ பட விஜய்யின் கேரக்டரைப்போல, ரொமான்ஸ் காமெடியாக உருவாகவிருக்கும் இப்படத்தில் ஜீவாவுக்கும் சமையல் வல்லுனர் (Chef) வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். சமீபத்தில் இப்படத்திற்கான ஃபோட்டோஷூட் நடைபெற்றுள்ளது. இதில் ஜீவாவும், கீர்த்தி சுரேஷும் கலந்து கொண்டுள்ளனர். விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;