‘பாபநாசம்’ சென்சார் சர்டிஃபிக்கெட்?

‘பாபநாசம்’ சென்சார் சர்டிஃபிக்கெட்?

செய்திகள் 24-Jun-2015 3:52 PM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசன் நடித்துள்ள ‘பாபநாசம்’ படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்ட நிலையில் இப்படம் இன்று தணிக்கை குழுவினருக்கு போட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. படத்தை பாரத்து ரசித்த தணிக்கை குழுவினர் படத்தில் எந்த ’கட்’டும் கொடுக்கவில்லையாம். இதனால் படத்திற்கு அனைவரும் பார்க்க கூடிய ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியுள்ளனர். இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் ‘பாபநாசம்’ படக்குழுவினர். ஜீத்து ஜோசஃப் இயக்கியுள்ள இப்படத்தில் கமல்ஹாசனுடன் கௌதமி, ஆஷா சரத், எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், கலாபவன் மணி, நிவேதா தாமஸ், எஸ்தர் முதலானோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். ‘பாபநாசம்’ படத்தை ஜூலை 3-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நமது - டிரைலர்


;