அனல் பறக்கும் ‘புலி’ வியாபாரம்!

அனல் பறக்கும் ‘புலி’ வியாபாரம்!

செய்திகள் 24-Jun-2015 3:20 PM IST VRC கருத்துக்கள்

விஜய்யின் ‘புலி’ பட டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவு பெற்றுள்ளது. வெளியான 3 நாட்களிலேயே 28 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ‘புலி’ டீஸரை பார்த்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் வியாபார விஷயங்களும் சூடு பிடித்துள்ளது. ஏற்கெனவே இப்படத்தின் NSC ஏரியா விநியோக உரிமையை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் கைபற்றியுள்ள நிலையில் ‘புலி’யின் கோவை விநியோக உரிமையை காஸ்மோ ஃபிலிம்ஸும், கர்நாடக உரிமையை இப்படத்தில் நடித்திருக்கும் சுதீப்புக்கு நெருக்கமான ஒருவரும் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. ‘புலி’யின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், கேரளாவை சேர்ந்தவருமான ஷிபு தமீனே இப்படத்தை கேரளாவில் வெளியிடுகிறார். இந்த ஏரியாக்கள் தவிர்த்து மற்ற ஏரியாக்கள் சம்பந்தமான வியாபார பேச்சு வார்த்தைகளும் இப்போது அனல் பறக்கும் விதமாக நடந்து வருகிறதாம். இது தவிர ‘புலி’யின் சாட்லைட் உரிமை பெறுவதிலும் பிரபல சேனல்களுக்கிடையே பெரும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;