மல்லிகாவை தொடர்ந்து ஜாக்கிசானுடன் இணையும் கத்ரீனா

மல்லிகாவை தொடர்ந்து ஜாக்கிசானுடன் இணையும் கத்ரீனா

செய்திகள் 24-Jun-2015 12:24 PM IST VRC கருத்துக்கள்

இந்திய, சீனா கூட்டு தயாரிப்பில் உருவாகும் ஹாலிவுட் படம் ‘குங்ஃபூ யோகா’. இந்திய கலாச்சாரம் மற்றும் சீனா கலாச்சாரத்தின் பின்னணியில், குங்ஃபூ, யோகா கலைகளை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தில் கதையின் நாயகனாக பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடிக்கிறார். இவர்களுடன் இன்னொரு பாலிவுட் நடிகையான ரியாசென்னும் நடிக்கிறார். ஏற்கெனவே ஜாக்கிசான் நடித்த ‘மித்’ என்ற படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான மல்லிகா ஷெராவத் நடித்திருந்தார். அவரை தொடர்ந்து இப்போது ஜாக்கிசானுன் கத்ரீனா கைஃப் இணைந்துள்ளார். இப்படத்தில் சீனா பல்கலைக்கழக பேராசிரியராக நடிக்கிறாராம் கத்ரீனா கைஃப். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொங்கு நாட்டு கால்நடை திருவிழா 2017


;