இந்த வாரம் 7 நேரடி தமிழ் படங்கள்!

இந்த வாரம் 7 நேரடி தமிழ் படங்கள்!

செய்திகள் 24-Jun-2015 12:05 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை (26-6-15) ஏழு நேரடி தமிழ் படங்கள் ரிலீசாகிறது. இதில் குறிப்பிடத்தக்க ஒரு படம் ‘இன்று நேற்று நாளை’. விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ் நடிப்பில், அறிமுக இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ள இப்படத்தை ‘திருக்குமரன் என்டர்பிரைசஸ்’ மற்றும் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ‘டைம் மெஷின்’ எனும் கான்சப்டை வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆதி, நிக்கில் கல்ராணி ஜோடியாக நடித்து, ஆதியின் அண்ணன் இயக்கியிருக்கும் ‘யாகவாராயினும் நா காக்க’ அதிரடி ஆக்‌ஷன் படமாக அமைந்துள்ளது. பிரபல தெலுங்கு பட இயக்குனரும், ஆதி, சத்யபிரபாஸ் ஆகியோரின் தந்தை ரவிராஜா பின்னி ஷெட்டி இப்படத்தை தயாரித்துள்ளார். ‘மிருகம்’, ‘ஈரம்’ ‘அரவான்’ போன்ற வித்தியாசமான படங்களில் நடித்த ஆதியின் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் இப்படம் மீது பரவலான ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

விமல், ‘புன்னகைப்பூ’ கீதா ஜோடியாக நடித்து, ஆர்.நாகேந்திரன் இயக்கியுள்ள ‘காவல்’ திரைப்படம், இசைக்கு ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவுக்கு என்.கே.ஏகாமபரம் என்ற கூட்டணியோடு ரிலீசாகவிருக்கிறது. இப்படங்கள் தவிர எஸ்.பி.சரண் தயாரிப்பில், மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் சிதம்பரம், அதிதி செங்கப்பா முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள ‘மூணே மூணு வார்த்தை’ படமும் ரிலீசாகவிருக்கிறது. காதல், காமெடி கலந்த ஜனரஞ்சக படமாம் இது! இந்த படங்களுடன் கருணாஸ் கதாநாயகனாக நடித்து, ரஜனீஷ் இயக்கியுள்ள ‘லொடுக்கு பாண்டி’, பெ.மோகன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்துள்ள ‘ஒரு தோழன் ஒரு தோழி’, கோபு பாலாஜி இயக்கத்தில் சாரதி, அன்சிபா நடித்துள்ள ‘பரஞ்சோதி’, ஆகிய படங்களும் வெளியாக இருப்பதாக விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கிறது.

மேலே குறிப்பிட்டுள்ள 7 படங்களில் கடைசி நேரத்தில் சில படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கவும் வாய்ப்பிருக்கிறது, அப்படி குறிப்பிடபடி 7 படங்களும் வெளியாகும் பட்சத்தில் இதில் என்னென்ன படங்கள் ரசிகர்களை கவர்ந்து பாக்ஸ் ஆஃபீசில் வெற்றிபெறும் என்பது ஒரு வாரத்திற்குள் தெரிந்துவிடும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டிரைலர்


;