‘10 எண்றதுக்குள்ள’ படத்தின் ரிலீஸ் தேதி?

‘10 எண்றதுக்குள்ள’ படத்தின் ரிலீஸ் தேதி?

செய்திகள் 24-Jun-2015 11:58 AM IST Chandru கருத்துக்கள்

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடிக்கும் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றன. பசுபதி, ஜாக்கி ஷெராப், மனோபாலா, சம்பூர்ணேஷ் பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவிருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க, இயக்குனர் விஜய் மில்டனே ஒளிப்பதிவும் செய்துள்ளார். இப்படம் சுதந்திரத்தினத்தன்று வெளியாகும் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் இப்போது காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகவிருப்பதாகச் சொல்கிறார்கள். அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;