VSOPயைத் தொடர்ந்து ADMK?

VSOPயைத் தொடர்ந்து ADMK?

செய்திகள் 24-Jun-2015 11:35 AM IST Chandru கருத்துக்கள்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, தமன்னா, சந்தானம் நடிக்கும் படத்திற்கு ‘VSOP’ என டைட்டில் வைத்தனர். இதன் விரிவாக்கம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஆர்யா நடிக்கும் இன்னொரு படத்திற்கு ADMK என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான ‘பெங்களூர் டேஸ்’ படம் தமிழ், தெலுங்கில் ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் ரீமேக் ஆகிறது. பிவிபி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பாஸ்கர் இயக்குகிறார். கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைக்கிறார். இப்படத்திற்கு ‘சிங்கப்பூர் நாட்கள்’ என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகின. இப்போது ‘ADMK’ அதாவது ‘அர்ஜுன் திவ்யா மற்றும் கார்த்திக்’ என பெயர் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், இந்த தலைப்பும் அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;