தயாரிப்பாளராகும் நடிகை அக்‌ஷயா!

தயாரிப்பாளராகும் நடிகை அக்‌ஷயா!

செய்திகள் 24-Jun-2015 10:39 AM IST VRC கருத்துக்கள்

ஏற்கெனவே பல நடிகைகள் சொந்தமாக படங்களை தயாரித்துள்ள நிலையில் நடிகை அக்‌ஷயாவும் ஒரு படத்தின் மூலம் தயாரிப்பாளராகிறார். ‘யாளி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தனது ‘A.B Creations’ நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார் அக்‌ஷயா! ‘கலாபகாதலன்’, ‘உளியின் ஓசை’ உட்பட பல படங்கலில் நடித்துள்ள அக்‌ஷ்யா தான் ‘யாளி’யின் கதையை எழுதியுள்ளார்.

‘காதல்’, ‘வெயில்’, ‘அங்காடித்தெரு’, ‘நான் மகான் அல்ல’, ‘டாலிங்’ உட்பட பல படங்களில் நடன இயக்குனராக பணிபுர்நித காதல் கந்தாஸ் ‘யாளி’ படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘நீநாதேநா’ என்ற கன்னட படத்தை இயக்கியுள்ளார். தமிழில் காதல் கந்தாஸ் இயக்கும் முதல் படமான ‘யாளி’யில் தமன், அக்‌ஷயா, அர்ஜுன், மனோபாலா, ஊர்வசி ஆகியோர் நடிக்கின்றனர். காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் மலேசிய நாட்டில் பினாங்கு, மலாக்கா, லங்காவி, டாப்பிங், ஜென்டிங் மற்றும் கோலாலம்பூர் பகுதிகளில் நடைபெறவுள்ளது. வருகிற 27-ஆம் தேதி படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்திற்கு அறிமுக இசை அமைப்பாளர் எஸ்.மோகன்ராம் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துருவ நட்சத்திரம் - டீசர் 2


;