ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ், சிம்பு!

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ், சிம்பு!

செய்திகள் 23-Jun-2015 2:03 PM IST VRC கருத்துக்கள்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘மாரி’ படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தின் டிரைலர் வெகு விரைவில் வெளியாக இருப்பது குறித்து நேற்று தனுஷ் ட்வீட் செய்திருந்தார்.

அதேபோல் சிம்பு நடித்திருக்கும் ‘வாலு’ படமும் விரைவில் (ஜூலை-17) ரிலீசாக இருக்கிறது. ஏற்கெனவே ‘வாலு’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாவது டிரைலரை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் ‘வாலு’ பட குழுவினர்! இது குறித்து ‘வாலு’ ஹீரோ சிம்பு விரைவில் ‘வாலு’ படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாக இருக்கிறது என்று 4 நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக ட்வீட் செய்துள்ளார். அதனை தொடர்ந்து தனுஷ் ‘மாரி’ டிரைலர் நாளை மறுநாள் மாலை வெளியாக இருப்பதாக ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு ட்வீட் செய்துள்ளார். இதனால் தனுஷ், சிம்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;