‘உறுமீன்’ சென்சார் சர்ச்சை! – இயக்குனர் விளக்கம்!

‘உறுமீன்’ சென்சார் சர்ச்சை! – இயக்குனர் விளக்கம்!

செய்திகள் 23-Jun-2015 12:32 PM IST VRC கருத்துக்கள்

சக்திவேல் பெருமாள் சாமி இயக்கியிருக்கும் படம் ‘உறுமீன்’. பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் தணிக்கை குழு அதிகாரிகளுக்கு போட்டு காட்டியுள்ளார் இயக்குனர் சக்திவேல் பெருமாள் சாமி! அப்போது அந்த டிரைலரில் வரும் ஒரு வாசகத்தை அனுமதிக்க முடியாது என்று கூறி அந்த டிரைலருக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்கள் தணிக்கை குழு அதிகாரிகள். இது குறித்து நாம் இயக்குனர் சக்திவேல் பெருமாள் சாமியிடம் பேசியபோது,

‘‘சமீபத்தில் 'உறுமீன்' படத்தின் டிரைலரை தணிக்கைக் குழுவினருக்கு காண்பித்தேன். அதில் ‘REVENGE IS ALWAYS ULTIMATE’ என்ற ஒரு வாக்கியம் வருகிறது. இதனை அனுமதிக்க முடியாது என்று அவர்கள் கூறிவிட்டார்கள். படத்தின் கதை சம்பந்தப்பட்டு வரும் அந்த வாக்கியத்தை எடுக்க முடியாது என்று நானும் கூறி விட்டேன். அதனால் ரிவைசிங் கமிட்டிக்கு செல்லலாம் என்று இருக்கிறேன். தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக, ஒரு வாக்கியத்துக்காக படத்தை தணிக்கைக் குழுவினர் நிராகரித்திருப்பது அநேகமாக இது தான் முதல் தடவையாக இருக்கும் என்று நினைக்கிறேன். தணிக்கைக் குழுவின் விதிகளும் அவர்கள் முன்வைக்கும் வாதங்களும் அவசியமற்றதாக உள்ளது. பல படங்களில் அநாகரீகமான வார்த்தைகள் இடம் பெறுகின்றன. ஆபாசம், வன்முறை என அனைத்தையும் அனுமதிக்கும் குழு, இதனை நிராகரித்திருப்பதற்கான காரணம் புரியவில்லை. ரிவைசிங் கமிட்டியிலும் இந்த வாசகத்தை அனுமதிக்கவில்லை என்றால் டிரைலர் வெளியிடாமலேயே படத்தை வெளியிடுவேன்’’ என்றார் இயக்குனர் சக்திவேல் பெருமாள் சாமி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வல்லவனுக்கு வல்லவன் - டீசர்


;