அவதார் இசை அமைப்பாளர் விபத்தில் மரணம்!

அவதார் இசை அமைப்பாளர் விபத்தில் மரணம்!

செய்திகள் 23-Jun-2015 11:55 AM IST VRC கருத்துக்கள்

உலக அளவில் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்த ‘டைட்டானிக்’, ’அவதார்’, ‘ஏலியன்ஸ்’, ‘அப்போலோ 13’ உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் ஹார்னர். இவர் விமான விபத்து ஒன்றில் சிக்கி பலியானார். இவருக்கு வயது 61. அமெரிக்க மாகாணமான கலிஃபோர்னியாவில் உள்ள சாண்டா பார்பரா அருகே நேற்று காலை தனது சொந்த விமானத்தில், ஹார்னர் பயணித்துக் கொண்டிருந்தபோது அவரது விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த பயங்கரமான விபத்தில், ஹார்னர் பலியானதை அவரது உதவியாளர் சில்வியா பாட்ரிக்ஜா உறுதி செய்துள்ளார். 2 ஆஸ்கர் விருது, 4 கிராமி விருதுகள் மற்றும் கோல்டன் க்ளோப் விருதுகள் என ஜேம்ஸ் ஹார்னர் பெற்ற விருதுகளின் பட்டியல் நீளமானது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;