‘என்னை அறிந்தால்’ சாதனையை முறியடித்த ‘புலி’

‘என்னை அறிந்தால்’ சாதனையை முறியடித்த ‘புலி’

செய்திகள் 23-Jun-2015 10:46 AM IST Chandru கருத்துக்கள்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் ‘புலி’ படத்தின் டீஸர் கடந்த 21ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் யு டியூப்பில் வெளியிடப்பட்டது. திட்டமிட்டபடி இந்த டீஸர் வெளியாகவில்லையென்றாலும், படத்தின் மீதிருந்த அதிரிபுதிரி எதிர்பார்ப்பால், எதிர்பார்த்ததைவிட பெரிய அளவில் இந்த டீஸருக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. டீஸர் வெளியான முதல் 21 மணி நேரத்தில் 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சாதித்தது. தொடர்ந்து 33 மணி நேரத்தில் 15 லட்சம் பார்வையாளர்களை எட்டியது.

இந்நிலையில் தற்போது 45 மணி நேரத்திலேயே 20 லட்சம் பார்வையாளர்களை எட்டி சாதனை படைத்திருக்கிறது ‘புலி’ டீஸர். விஜய் நடித்த படங்களிலேயே குறைந்த நேரத்தில் 20 லட்சம் பார்வையாளர்களைக் கடந்தது இந்த டீஸர்தான். அதோடு ஒட்டுமொத்தமாக தென்னிந்திய சினிமாவில் 20 லட்சம் பார்வையாளர்களைக் கடந்த டீஸர்களில் ‘ஐ’ படத்திற்குப் பிறகு 2வது இடத்தைப் பிடித்து சாதித்திருக்கிறது ‘புலி’ டீஸர்.

‘ஐ’ படத்தின் டீஸர் வெளியான 35 மணி நேரத்தில் 20 லட்சம் பார்வையாளர்களையும், 45 மணி நேரத்தில் 25 லட்சம் பார்வையாளர்களையும் சென்றடைந்ததே இப்போது வரை தென்னிந்திய சினிமாவின் உச்சபட்ச சாதனை. ‘ஐ’ படத்தை அடுத்து ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீஸர் 48 மணி நேரத்தில் 20 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து 2வது இடத்திலிருந்தது. இந்த சாதனையை முறியடித்து ‘புலி’ டீஸர் தற்போது 2ஆம் இடத்தைக் கைப்பற்றியிருக்கிறது.

(டீஸர், டிரைலர்களின் லைக்கைப் பொறுத்தவரை இப்போதுவரை என்னை அறிந்தால் டீஸரே இந்திய அளவில் 2ஆம் இடத்திலும், தென்னிந்திய அளவில் முதலிடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. முதல் 35 மணி நேரத்தில் 42 ஆயிரம் லைக்குகளை எட்டிய ‘என்னை அறிந்தால்’ டீஸர் தற்போது 94 ஆயிரம் லைக்குகளோடு உச்சத்தில் இருக்கிறது).

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;