எச்சரிக்கை – ‘போலி’ ராகவா லாரன்ஸ்!

எச்சரிக்கை – ‘போலி’ ராகவா லாரன்ஸ்!

செய்திகள் 23-Jun-2015 10:46 AM IST Top 10 கருத்துக்கள்

‘‘எனது பெயரில் ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் எதுவும் கிடையாது. எனவே அது மாதிரி எது எதில் எந்தச் செய்தி வந்தாலும் நம்பாதீர்கள்’’ என்று இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் கூறி உள்ளார். மேலும் அவர் கூறியதாவது, ‘‘அடுத்து எனது படத்தில் நஸ்ரியா கதாநாயகியாக நடிக்கிறார் என்று நானே ட்விட் செய்த மாதிரி நேற்று சோஷியல் மீடியாவில் செய்தி பரப்பப்பட்டது. எனது பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு துவக்கப்பட்டு பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார்கள். நான் ஃபேஸ்புக், ட்விட்டர் எதையும் உபயோகப்படுத்தவில்லை. மேற்கொண்டு இது மாதிரி தொடருமானால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று ராகவா லாரன்ஸ் எச்சரித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரிச்சி - டீசர்


;