நேரடி மலையாள படத்தில் கமல்ஹாசன்!

நேரடி மலையாள படத்தில் கமல்ஹாசன்!

செய்திகள் 23-Jun-2015 10:34 AM IST VRC கருத்துக்கள்

மலையாளத்தில் இருந்து தமிழில் ரீ-மேக் ஆன ‘சென்னையில் ஒரு நாள்’, ‘36 வயதினிலே’ ஆகிய படங்களின் கதையை எழுதியவர்கள் பாபி, சஞ்சய். இந்த இரண்டு படங்களும் தமிழில் வெற்றிப் படங்களாக அமந்தன! தமிழில் ‘36 வயதினிலே’ படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸ் மலையாளத்தில் இயக்கி மாபெரும் வெற்றிபெற்ற ‘மும்பை போலீஸ்’ படம் உட்பட இவர்கள் கதை எழுதிய பெரும்பாலான மலையாள படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன! மலையாள ‘டிராஃபிக்’ (சென்னையில் ஒரு நாள்) படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் நடிகர் கமல்ஹாசன் பாபி, சஞ்சயை சென்னைக்கு அழைத்து பாராட்டியிருக்கிறார். அத்துடன் ‘டிராஃபிக்’ படத்தை தமிழில் ரீ-மேக் செய்து நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாகவும் கமல் கூறியுள்ளார்! ஆனால் அப்போது அந்த வாய்ப்பு கமலிடமிருந்து கைநழுவிப் போக, தனக்கு மலையாள படம் ஒன்றில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் அதற்காக ஒரு கதையை தயார் செய்யவும் பாபி, சஞ்சயிடம் சொல்லியுள்ளார் கமல்ஹாசன். இப்போது அதற்கான வேலைகளில் இருக்கிறார்களாம் இருவரும்! இதனை பாபி, சஞ்சய் இருவரும் சமீபத்தில் பிரபல மலையாள பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.

ஆர்மபகாலத்தில் நிறைய மலையாள படங்களில் நடித்த கமல்ஹாசன், கடைசியாக ஹீரோவாக நடித்த மலையாள படம் ‘சாணக்கியன்’. இப்படம் கடந்த 1989-ல் வெளியானது. இப்படத்தை தொடர்ந்து ‘ஃபோர் ஃப்ரெண்ட்ஸ்’ என்ற மலையாள படத்தில் கெஸ்ட் ரோலில் நடிகர் கமல்ஹாசனாகவே நடித்துள்ளார். இப்படம் 2010-ல் வெளியானது.

கமல்ஹாசனுக்காக தயாராகி வரும் கதை மலையாளம், தமிழ் என அனைத்து மொழிகளுக்கும் ஏற்ற கதையாக இருக்கும் என்று அவர்கள் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;