ஊட்டியில் ‘வாகா’ க்ளைமேக்ஸுக்காக விக்ரம் பிரபு, ரன்யா!

ஊட்டியில் ‘வாகா’ க்ளைமேக்ஸுக்காக விக்ரம் பிரபு, ரன்யா!

செய்திகள் 23-Jun-2015 10:06 AM IST Chandru கருத்துக்கள்

விஜய் இயக்கத்தில் ‘இது என்ன மாயம்’ படத்தில் நடித்த விக்ரம் பிரபு, தற்போது ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் ‘வாகா’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ‘விஜயபார்கவி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கி பல கட்டங்களை எட்டியிருக்கிறது.

தற்போது க்ளைமேக்ஸ் காட்சிக்காக ஊட்டியில் முகாமிட்டிருக்கிறது ‘வாகா’ படக்குழு. கதைப்படி படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி மழையில் நடப்பதுபோல் உருவாக்க வேண்டுமாம். இதனால் செயற்கை மழையை ஏற்பாடு செய்திருக்கின்றனர். ஆனால், நிஜமாகவே மழை கொட்டித் தீர்த்தால் அதிலேயே படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். 150க்கும் மேற்பட்ட துணை நடிகர்களுடன் தொடர்ந்து அங்கே படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;