தமிழுக்கு எண் ஒன்றை அழுத்துகிறார் ஜீவா!

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்துகிறார் ஜீவா!

செய்திகள் 23-Jun-2015 9:34 AM IST Chandru கருத்துக்கள்

‘யான்’ படத்திற்குப் பிறகு சில மாதங்கள் எந்த படத்தையும் கமிட் செய்யாமல் இருந்த ஜீவா, தற்போது வரிசையாக படங்களை ஒப்பந்தம் செய்து வருகிறார். ‘அம்பா சமுத்திரம் அம்பானி’ பி.எஸ்.ராம்நாத் இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து ‘திருநாள்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஜீவா, ‘யாமிருக்க பயமே’ டீகேயின் இயக்கத்தில் ‘கவலை வேண்டாம்’ படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

இந்த இரண்டு படங்களை அடுத்து தற்போது ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ இயக்குனர் ராம் பிரகாஷ் இயக்கத்திலும் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார் ஜீவா. திருநாள், கவலை வேண்டாம் படங்களின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்ததும் இப்படத்திற்கான வேலைகள் துவங்கும் எனத் தெரிகிறது. ஆக்ஷன், காமெடி கலந்த இப்படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கதாபாத்திரங்களுக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறதாம். செப்டம்பரில் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - டீசர்


;