அனுஷ்காவின் பிட்னஸ் டிரைனரான ஆர்யா!

அனுஷ்காவின் பிட்னஸ் டிரைனரான ஆர்யா!

செய்திகள் 23-Jun-2015 8:57 AM IST Chandru கருத்துக்கள்

செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘இஞ்சி இடுப்பழகி’ படம் மூலம் மீண்டும் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆர்யாவும், அனுஷ்காவும். இப்படத்தையும் பிவிபி நிறுவனமே தயாரிக்கிறது. இப்படம் தெலுங்கில் ‘சைஸ் ஜீரோ’ என்ற பெயரில் உருவாகிக் கொண்டிருக்கிறது. பழம்பெரும் இயக்குனர் ராகவேந்திர ராவின் மகனும், இயக்குனருமான கே.எஸ்.பிரகாஷ் இந்த ‘இஞ்சி இடுப்பழகி’யை இயக்குகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மரகதமணி இசையமைக்கிறார். கனிகா திலோன் கோவேலமுடி இப்படத்திற்கான கதையை எழுத, பாடல்களை எழுதுகிறார் மதன் கார்க்கி.

‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் கதைப்படி அனுஷ்கா குண்டான பெண்மணியாக நடிக்கிறாராம். இதற்காக தற்போது தன் உடல் எடையை கணிசமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும், தன் உடல் எடையைக் குறைப்பதற்காக பிட்னஸ் டிரைனராக இருக்கும் ஆர்யாவிடம் அனுஷ்கா பயற்சி எடுப்பது போலவும், பின்னர் இருவருக்கும் காதலர் மலர்வது போலவும் இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன. பெருத்த இடையுடன் உள்ள அனுஷ்காவை இஞ்சி இடுப்பழகி ஆக்குவதுதான் இப்படத்தில் ஆர்யாவின் தலையாய கடமையாம். மார்ச் மாதம் இப்படத்திற்கான பூஜை போடப்பட்டு, தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;