‘புலி’ டீஸரின் சூப்பர் சாதனை!

‘புலி’ டீஸரின் சூப்பர் சாதனை!

செய்திகள் 22-Jun-2015 3:03 PM IST Chandru கருத்துக்கள்

இளையதளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்றிரவு வெளியிடப்பட வேண்டிய ‘புலி’ படத்தின் டீஸர், டெக்னீஷியன் ஒருவர் இணையதளத்தில் திருட்டுத்தனமாக பதிவேற்றியதைத் தொடர்ந்து நேற்று மதியம் 2 மணிக்கே வெளியிடப்பட்டது. இந்த குளறுபடிகளுக்கு மத்தியிலும் ‘புலி’ படத்தின் டீஸருக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்த டீஸர் வெளியாகி 24 மணி நேரத்தில், யு டியூப்பில் கிட்டத்தட்ட 12 லட்சம் பேரால் பார்வையிடப்பட்டுள்ளது. 21 மணி நேரத்தில் ‘புலி’ டீஸர் 10 லட்சம் பார்வையாளர்கள் என்ற மைல் கல்லை எட்டியிருக்கிறது. விஜய் படங்களின் டீஸர்களில் இது ஒரு அதிகபட்ச சாதனை. இதற்கு முன்பு ‘தலைவா’ டிரைலர் 24 மணி நேரத்தில் 10 லட்சம் பேரால் கண்டுகளிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக தமிழ்ப் படங்களில் ஐ படத்தைத் தொடர்ந்து 2 இடத்தைப் பிடித்திருக்கிறது ‘புலி’ டீஸர். என்னை அறிந்தால் டீஸர் 3ஆம் இடத்திலிருக்கிறது.

ஐ பட டீஸர் வெளியான 12 மணி நேரத்தில் 10 லட்சம் பார்வையாளர்களையும், ‘என்னை அறிந்தால்’ டீஸர் வெளியான 22 மணி நேரத்தில் 10 லட்சம் பார்வையாளர்களையும் சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புலி - அதிகாரபூர்வ டிரைலர்


;