ஜெய், சுரபியின் ‘புகழ்’ படப் பாடல்கள் எப்போது?

ஜெய், சுரபியின் ‘புகழ்’ படப் பாடல்கள் எப்போது?

செய்திகள் 22-Jun-2015 2:05 PM IST VRC கருத்துக்கள்

மணிமாறன் இயக்கத்தில் ஜெய், சுரபி இணைந்து நடித்து வரும் படம் ‘புகழ்’. இப்படத்தை ‘Film Department’ என்ற பேனரில் சுஷாந்த் பிரசாத் தயாரிக்கிறார். இந்தப் படத்தை ‘ரேடியன்ஸ் மீடியா’ நிறுவனம் சார்பில் வருண் மணியன் வெளியிடவுள்ளார். ‘வடகறி’ படத்திற்கு இசை அமைத்த விவேக், மெவின் இருவர் ‘புகழ்’ படத்திற்கும் இசை அமைத்திருகிறார்கள். ஹரிஹரன், சித்ரா, ‘ஆஷிக்கி 2’ ‘தும் ஹி ஹோ’ பாடல் புகழ் அர்ஜித் சிங், அனிருத் ரவிச்சந்திரன், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் இப்படத்திற்காக பாடல்களை பாடியுள்ளனர். இப்படத்தின் இசை உரிமையை ‘சோனி மியூசிக்’ நிறுவனம் வாங்கியுள்ளது. ‘புகழ்’ படப்பாடல்கள் அடுத்த மாதம் 3-ஆம் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;