யானையுடன் ஓவியா நடிக்கும் சீனி!

யானையுடன் ஓவியா நடிக்கும் சீனி!

செய்திகள் 22-Jun-2015 12:55 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர்கள் மனோஜ்குமார், சுராஜ் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ராஜதுரை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘சீனி’. இந்த படத்தில் கதாநாயகனாக புதுமுகம் சஞ்சீவி நடித்துள்ளார். கதாநாயகியாக ஓவியா நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, சரவணன், செந்தில், சின்னி ஜெயந்த், கஞ்சா கருப்பு, பவர்ஸ்டார் சீனிவாசன், இயக்குனர்கள் டி.பி.கஜேந்திரன், மனோஜ்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து இயக்குனர் ராஜதுரை கூறும்போது,

‘‘ஒரு தடுத்தர குடும்பத்தில் பிறந்த ஒரு இளைஞர் அரசாங்க வேலைக்கு போக பிடிக்காமல் பெரிய தொழில் அதிபர் ஆக வேண்டும் என்ற ஆசையில் போராடுகிறார். அவரது போராட்டம் எவ்வாறு வெல்கிறது? அவர் எப்படி தொழில் அதிபர் ஆகிறார்? அவருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவியது யார்,யார்? என்பதே ‘சீனி’ படத்தின் கதையும் களமும். இந்த கதையை முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து காதல், சென்டிமென்ட் காட்சிகளுடன் ஜனரஞ்சக படமாக இயக்கியுள்ளேன். இப்படத்தில் சீதா என்ற யானையும் நடித்திருக்கிறது. படத்தில் கதாநாயகன் சஞ்சீவி, ஓவியா ஆகியோருடன் யானை வரும் காட்சிகள் விறுவிறுப்பாகவும், காமெடியாகவும் படமாக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
திரையுலகில் நடிகர்கள் அர்ஜுன், செந்தில் உட்பட பல நடிகர்களிடம் மக்கள் தொடர்பாளராக பணியாற்றியவர் மதுரை செல்வம். இவர் தனது ‘வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை நாகராஜன் கவனிக்க, படத்தொகுப்பை சாய் சுரேஷ் கவனித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. ‘சீனி’ விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இறவாகாலம் - டீசர்


;