பாக்ஸ் ஆஃபீஸ் ‘புலி’க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

பாக்ஸ் ஆஃபீஸ் ‘புலி’க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

செய்திகள் 22-Jun-2015 11:19 AM IST Chandru கருத்துக்கள்

இளையதளபதி விஜய் தனது 41-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். கடந்த 1992-ஆம் ஆண்டு ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான விஜய்யின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாக இருந்தது. இதற்கு காரணம் அவரது கடுமையான உழைப்போடு அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் வழிகாட்டுதலும் தான்! இன்று தமிழ் சினிமவில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆகியோருக்கு அடுத்தபடியாக நட்சத்திர அந்தஸ்திலாகட்டும், சினிமா வியாபார விஷயங்களிலாகட்டும் விஜய்க்கும் ஒரு முக்கியமான இடம் உண்டு! சினிமாவில் நடிப்பதுடன் தன்னாலியன்ற சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வரும் விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்! விஜய் நடித்த ஒவ்வொரு படம் வெளியாகும்போது அதை ஒரு திருவிழா மாதிரி கொண்டாடி மகிழ்வார்கள் அவரது ரசிகர்கள்! இதற்கு இந்த வருட பிறந்த நாளும் விதிவிலக்கல்ல!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று முன்தினம் வெளியாகி டிரென்டில் இருக்கும் நிலையில் ‘புலி’ படத்தின டீஸர் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் இது வரை நடித்த படங்களிலேயே அதிக பொருட் செலவில் ‘புலி’ உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் விஜய் இதுவரை நடித்திராத வேடத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறார். இதனால் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மொத்த கோலிவுட்டின் கவனமும் ‘புலி’ பக்கம் திரும்பியுள்ளது. இந்நிலையில் இன்று லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் காணும் விஜய்க்கு ‘டாப்10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புலி - அதிகாரபூர்வ டிரைலர்


;