ஒரே நிறுவனத்தின் கையில் தனுஷ், சிம்பு படங்கள்!

ஒரே நிறுவனத்தின் கையில் தனுஷ், சிம்பு படங்கள்!

செய்திகள் 22-Jun-2015 10:57 AM IST Chandru கருத்துக்கள்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘மாரி’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில், பரபரப்பாக ரிலீஸுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார் அனிருத் இசையமைத்திருக்கிறார். இன்னொருபுறம் வேல்ராஜ் இயக்கத்தில் எமி ஜாக்ஸன், சமந்தாவுடன் இன்னும் பெயரிடப்படாத புதிய படமொன்றிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். இப்படத்திற்கும் அனிருத்தே இசையமைக்கிறார். இந்த இரண்டு படங்களின் சாட்டிலைட் உரிமையையும் சன் டிவி கைப்பற்றியுள்ளதாம்.

மாரி, விஐபி 2 இல்லாமல் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் சாட்டிலை உரிமையும் சன் டிவி வசமே இருப்பதாக கூறப்படுகிறது. தனுஷ் படங்கள் மட்டுமின்றி, சிம்பு நடிப்பில் ஜூலை 17ம் தேதி ரிலீஸாகவிருக்கும் ‘வாலு’ படமும், பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படமும் சன் டிவி கைவசமே உள்ளதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - டீசர்


;