புலி - டீஸர் விமர்சனம்

புலி - டீஸர் விமர்சனம்

கட்டுரை 22-Jun-2015 10:28 AM IST Top 10 கருத்துக்கள்

இந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களுள் விஜய்யின் ‘புலி’யும் ஒன்று. சிம்புதேவன் இயக்கத்தில் வித்தியாசமான வேடங்களில் விஜய் நடித்திருக்கும் ‘புலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர், அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மதியம் வெளியானது. எல்லாம் திட்டமிட்டபடி போய்க் கொண்டிருந்த நேரத்தில், கடைசி நேர பரபரப்பாக ‘புலி’ பட டீஸர் திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து வேறு வழியின்றி நேற்று மதியமே டீஸரை வெளியிட்டனர். இந்த குளறுபடிகளுக்கு மத்தியிலும் ‘புலி’ டீஸரை அதற்குள்ளாகவே 10 லட்சம் பேர் யு டியூப்பில் பார்வையிட்டுள்ளனர். சரி... ‘புலி’ டீஸர் எப்படியிருக்கிறது?

மொத்தம் 55 வினாடிகள் ஓடும் இந்த டீஸர் முழுக்க முழுக்க மன்னர் யுகத்தில் நடைபெறும் காட்சிகளை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இரும்புக்கவச முகமூடி அணிந்த வீரர்கள், பிரம்மாண்ட கோட்டை அரண்மனை, ராணியாக ஸ்ரீதேவி, தளபதியாக சுதீப், கலர்ஃபுல் ஹன்சிகா, அட்டகாசமான ஸ்ருதிஹாசன் என அமர்க்களாக உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த டீஸர். ஊதா நிற கான்டாக்ட் லென்ஸில், ஷார்ப் பார்வையுடன் அறிமுகமாகியிருக்கிறார் விஜய். ரசிகர்களுக்கு இது ஸ்பெஷல் ட்ரீட்.

மன்னர் யுகத்தில் கிராப் ஹேர் ஸ்டைல், கான்டாக்ட் லென்ஸ், பிரெஞ்ச் தாடியுடன் வீரரா? என்ற லாஜிக் கேள்விகளுக்கு விடையாக, ‘‘விஜய் தற்போதைய காலகட்டத்திலிருந்து, மன்னர் யுகத்திற்கு டைம் மெஷின் மூலம் பயணம் செய்பவராக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அவருடைய கேரக்டர் அப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது’’ என்கிறார்கள். இது ‘புலி’ படத்தைப் பார்க்கும் ஆவலை இன்னும் அதிகரித்திருக்கிறது.

டான்ஸ், ஃபைட், விஷுவல் எஃபெக்ட்ஸ், செட்டிங்ஸ் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ‘புலி’ படத்தில் நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய விருந்தை அளிக்கும் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்த டீஸர். விஜய்யின் இன்னொரு கேரக்டர் குறித்த சஸ்பென்ஸும் தொடர்ந்திருப்பதால் டிரைலருக்கான எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

காட்சிகளில் இருக்கும் பிரம்மாண்டம் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையில் கொஞ்சம் குறைவதுபோல் தோன்றியிருப்பதைத் தவிர இந்த டீஸரில் பெரிய குறையொன்றுமில்லை.

மொத்தத்தில்.... ‘புலி’ படத்தின் மீதான எதிர்பார்பை எகிற வைத்திருக்கிறது இந்த டீஸர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புலி - அதிகாரபூர்வ டிரைலர்


;