'புலி' டீஸரை திருடியவர் போலீஸில் ஒப்படைப்பு?

'புலி' டீஸரை திருடியவர் போலீஸில் ஒப்படைப்பு?

செய்திகள் 21-Jun-2015 8:47 PM IST Chandru கருத்துக்கள்

விஜய்யின் பிறந்தநாளை (ஜூன் 22) முன்னிட்டு நேற்று இரவு 12 மணிக்கு ‘புலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து இன்று இரவு 12 மணிக்கு அப்படத்தின் டீஸர் வெளிவரும் என்றும் அதிகாரபூர்வமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென இப்படத்தின் டீஸரை யாரோ திருட்டுத்தனமாக இணையதளங்களில் கசிய விட்டனர். இதனால் ‘புலி’ படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுவிட்டதால் வேறுவழியின்றி இன்று இரவு வெளியாக வேண்டிய டீஸரை அவசர அவசரமாக இன்று மதியம் 2 மணிக்கே வெளியிட்டுள்ளனர்.

இன்னொருபுறம் ‘புலி’ டீஸரை வெளியிட்டது யார் என்ற விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தின் சவுன்ட் மிக்ஸிங் பணிகள் சென்னை ஃபோர் ஃபிரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில் உள்ள ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. அங்கிருந்துதான் இந்த டீஸரை யாரோ கசியவிட்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறதாம். தற்காலிகப் பணியாளர் ஒருவர் இந்த செயலை செய்திருப்பதாகவும், அவரை தற்போது போலீஸிடம் விசாரணைக்காக ஒப்படைத்திருப்பதாகவும் கூறுகிறார்கள். விரைவில் இப்பிரச்சனை குறித்த முழு விவரமும் அதிகாரபூர்வமாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புலி - அதிகாரபூர்வ டிரைலர்


;