ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகும் விக்ரம் நாயகி!

ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகும் விக்ரம் நாயகி!

செய்திகள் 20-Jun-2015 3:53 PM IST VRC கருத்துக்கள்

‘டார்லிங்’ படத்தில் நிக்கி கல்ராணி, ‘பென்சில்’ படத்தில் ஸ்ரீதிவ்யா, ‘த்ரிஷா இல்லேனா நயன்தாரா’ படத்தில் ஆனந்தி ஆகியோரை தொடர்ந்து எமி ஜாக்சனை தனக்கு ஜோடியாக்கியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். இயக்குனர் விஜய்யிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த ஷங்கர் மற்றும் குணா ஆகியோர் இணைந்து இயக்கும் படத்தில் தான் ஜி.வி.பிரகாஷ் குமாரும், எமி ஜாக்சனும் இணைந்து நடிக்கிறார்கள்! இந்த படத்தின் இன்னொரு ஹைலைட்டான விஷயம் இப்படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுத, வசனத்தை இயக்குனர் அட்லீ எழுதுகிறார். ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளன. இப்படத்தில் கதையின் நாயகனாக நடிப்பதோடு இசை பொறுப்பினையும் ஜி.வி.பிரகாஷ்குமாரே ஏற்றிருக்கிறார். இப்படத்திற்கான மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;