பரத்துக்கு ஜோடியாகும் பஞ்சாப் அழகி!

பரத்துக்கு ஜோடியாகும் பஞ்சாப் அழகி!

செய்திகள் 20-Jun-2015 3:21 PM IST VRC கருத்துக்கள்

பஞ்சாபிலிருந்து மற்றும் ஒரு அழகி தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார். அவரது பெயர் பானுஸ்ரீ மெஹ்ரா. ‘வருடு’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த பானுஸ்ரீ மெஹ்ரா தமிழில் பரத்துக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. தமிழில் பரத்துடன் நடிப்பது குறித்து பானுஸ்ரீ மெஹ்ரா கூறும்போது, ‘‘டேராடூனில் மேல்நிலை படிப்பை முடித்து மும்பையில் மாஸ் மீடியா பட்டப்படிப்பு படித்து வந்த நேரத்தில் மாடலிங் செய்ய ஆரம்பித்தேன். பல விளம்பரங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு ‘வருடு’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து எனது தாய் மொழியான பஞ்சாபி மொழிப் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தற்போது தமிழில் நடிகர் பரத்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படத்தில் நான் ஒரு செய்தி வாசிப்பாளராக, மிகவும் தைரியாமான பெண்ணாக நடிக்கிறேன்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;