‘இன்று நேற்று நாளை’ ரிலீஸ் தேதி ரெடி!

‘இன்று நேற்று நாளை’ ரிலீஸ் தேதி ரெடி!

செய்திகள் 20-Jun-2015 2:18 PM IST VRC கருத்துக்கள்

‘சூதுகவ்வும்' படத்தை இயக்கிய நலன் குமாரசாமியிடம் அசிஸ்டென்டாக பணியாற்றிய ரவிக்குமார் இயக்கியிருக்கும் படம் ‘இன்று நேற்று நாளை’. விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ் ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தை சி.வி.குமாரின் ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும், கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. டைம் மெஷினை வைத்து ஃபாண்டஸி டைம் டிராவல் கதையாக சித்தரிக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது இந்த படத்தை தமிழகம் முழுக்க வெளியிடும் உரிமையை ‘அபி&அபி பிக்சர்ஸ்’ அபினேஷ் இளங்கோவன் வாங்கியிருக்கிறார். ரசிகர்களிடையே பரவலான எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்க்ம் இப்படத்தை வருகிற 26 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள்னர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;