விஜய் 59 அதிரடி ஆரம்பம்!

விஜய் 59 அதிரடி ஆரம்பம்!

செய்திகள் 20-Jun-2015 11:10 AM IST VRC கருத்துக்கள்

விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் மற்றும் கிராஃபிக்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். தற்போது லண்டனில் இருக்கும் விஜய் விரைவில் சென்னை திரும்ப இருக்கிறார். விஜய் சென்னை திரும்பியதும் அட்லி இயக்கும் பட வேலைகளில் இறங்கவுள்ளார். இந்த படத்திற்காக சென்னையிலுள்ள பின்னி மில்லில் கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் செலவில் பிரம்மண்ட செட் அமைத்து வருகிறார்கள். இந்த செட்டின் வேலைகள் இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்து விடுமாம். இதனை தொடர்ந்து அட்லி, விஜய் இணையும் படத்தின் படப்பிடிப்பு வருகிற 26-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிராகஷ் குமார் இசை அமைக்கிறார். இவர் இசை அமைக்கும் 50-ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்க இப்படத்தை ‘ கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;